Wednesday, April 8, 2020

தாம்பத்தியம்

மாதவிடாய்  என்றால் என்ன? 
                         
             பெண்ணின் உடலில் ஏற்படும் இனப்பெருக்கச் செயற்பாட்டுகளில் மாதவிடாய்கு முதலிடம் கிடைக்கிறது. மாதவிடாய் என்பது கருக்கடிடாத முட்டை மற்றும் கருப்பை சுவரின் பகுதிகள் படிப்படியாக கழன்று கருப்பையில் இருந்து நீங்கி வெளியேறுவது ஆகும். 
              

மாதவிடாய்  ஏற்படும்  முறைகள். 
 1.மூளையில் உள்ள கபச் சுரபியினால் உண்டாகும் ஓமோன் ஊடாக ஏற்படுத்தப்படும் தூண்டலினால் சூலகங்களில் உள்ள முட்டைகள் சில முதிர்ச்சி அடையும். 

2.முதிர்ச்சி அடைந்த முட்டைகளில் ஒன்று சூலகத்தில் இருந்து வெளியேறும். இச் செயற்பாடு முட்டை வெளியேறுதல் என கூறப்படும். இது பலோப்பியன் குழாயில் நுலைந்து கருப்பை நோக்கி செல்ல ஆரம்பிக்கும். 

3.முட்டை பலோப்பியன் குழாயின் ஊடாக செல்வது ஒரு ஆண் விந்துடன் சேர்ந்து கருவாகும் எதிர்பார்புடன் ஆகும். பலோப்பியன் குழாயினுள் விந்துகள் வந்தால் இம் முட்டை ஒரு விந்துடன் சேர்ந்து கருவாக உருவாகும். இது கருக்கட்டல் எனப்படும். 

4.சூலகத்தில் முடடை முதிர்வடையும் காலத்தில் சூலகத்தில் சுரக்கப்படும் பாலியல் ஓமோன்களின் தாக்கத்தினால் கருப்பை சுவரில் புதிய படலம் உண்டாகும். கரு கருப்பையினுள் தங்க ஏற்பாடாக உள்ள இடம் இப்படலம் ஆகும். 

5.புதிய கருப்பை படலம் உருவாதல் மட்டுமல்ல, கருவிற்கு தேவையான போசாக்கு வழங்குவதற்காக கருப்பைக்கு நன்றாக குருதி பரிமாற்றமும் இதன் போது இடம் பெறும்.  கருக்கட்டிய நுகம் கருப்பையினுள் சென்று அப்படலத்தில் சிசுவாக வளர ஆரம்பிக்கும். 

6.விந்துடன் சேராவிடடாலும் கூட முடடை கருப்பையினுள் செல்லும்,  கருக்கட்டல் ஏற்படாத காரணத்தால் இம் முடடையும் புதிதாக உருவாக்கிய கருப்பை சுவரின் படலமும் குருதியுடன் யோனி வழியினால் வெளியே செல்லும்.இதுவே மாதவிடாய் என அளைக்கப்படும். அடுத்த மாதமும் இது போன்ற செயற்பாடு தொடரும்.. 

No comments:

Post a Comment

Jobs

தாம்பத்தியம்

மாதவிடாய்  என்றால் என்ன?                                         பெண்ணின் உடலில் ஏற்படும் இனப்பெருக்கச் செயற்பாட்டுகளில் மாதவிடாய்கு முதலி...

Popular post. J. A. E